PUDUCHERRY
புதுச்சேரி | Puducherry
புதுச்சேரி | Puducherry
VOCAL
|
VOCAL
|
(in Tamil)
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே! வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! |
(Transliteration)
Vāḻviṉil cem'maiyai ceypavaḷ nīyē māṇpukaḷ nīyē eṉ tamiḻ tāyē vīḻvārai vīḻātu kāppavaḷ nīyē! Vīraṉiṉ vīramum, veṟṟiyum nīyē! |
தாழ்த்திடு நிலையினில்
உனைவிடுப் பேனோ தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ? |
Tāḻttiṭu nilaiyiṉil
uṉaiviṭup pēṉō tamiḻaṉ ennāḷum talaikuṉi vēṉō cūḻntiṉpam nalkiṭum paintamiḻ aṉṉāy tōṉṟuṭal niṉuyir nāṉmaṟap pēṉō? |
செந்தமிழே உயிரே
நறுந் தேனே செயலினை மூச்சினை உனக்களித் தேனே நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! |
Centamiḻē uyirē
naṟun tēṉē ceyaliṉai mūcciṉai uṉakkaḷit tēṉē naintā yeṉilnaintu pōkumeṉ vāḻvu naṉṉilai uṉakkeṉil eṉakkun tāṉē! |
முந்திய நாளினில்
அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போலே செழித்தஎன் தமிழே ஒளியே வாழி! செழித்தஎன் தமிழே ஒளியே வாழி! செழித்தஎன் தமிழே ஒளியே வாழி! |
Muntiya nāḷiṉil
aṟivum ilātu moyttanaṉ maṉitarām putuppuṉal mītu centāmaraik kāṭu pūttatu pōlē ceḻitta'eṉ tamiḻē oḷiyē vāḻi! Ceḻitta'eṉ tamiḻē oḷiyē vāḻi! Ceḻitta'eṉ tamiḻē oḷiyē vāḻi! |